Sunday, 10 April 2011

தேர்தல் கவிதை

உங்கள் வாக்கு யாருக்கு? 
இந்தத் தேர்தலிலும் 
முத்திரையிட வேண்டுமா?
நேற்று வென்றவர்கள் 
விரலை வெட்டினர் ....
இனிமேல் அனைவருக்கும் 
மோதிரம் பரிசாம்!
விலைவாசி ஏழைகளின் 
துகிலை உரிகின்றது!
பாஞ்சாலியாய்க் கதறும்....
இந்திய ஜனநாயகம்!
தேர்தல்கள் நாற்காலிக்கா?
இல்லை நாட்டிற்கா?
ஏதோ சாதிக்குமாம் 
எங்கும் சாதித் "தீ "!
மயக்கும் வார்த்தைகளில் 
மந்திர மத வெறி !
பொற்கால ஆட்சியில் 
கற்கால சிந்தனைகள்!
மூட்டைப் பூச்சிகளுக்காக 
இனியும் ஒடலாகாது....
கேடிகளுக்கும் கோடிகளுக்கும்
இங்கு அரசியல் அதிகாரங்கள்!
வரும் கேட்டினை
யார் தடுப்பார்?
இந்தத் தேர்தலிலும்
கட்டாயம் வாக்களிக்க வேண்டும்....
மத வெறி மாயத்திடவே!
மனிதநேயம் காத்திடவே!
                       - ஆசுரா
( தீக்கதிர் 21 -01 -2001 )